பேத்திக்கு தடுப்பூசி போட சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.. மேற்கூரை இடிந்து விழுந்து படுகாயம்!
மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல் முருகன். இவர் தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி விமலா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மதுரை நரிமேடு பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விமலாவின் தாய் போது மணி (57) தனது பேத்தி இரண்டு மாத பெண் குழந்தை மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன் தடுப்பூசி போடுவதற்காக அழைத்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுகாதார நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மணியின் தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை பத்மணியம்மாள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக இரண்டு மாத பெண் குழந்தையும், இரண்டு வயது குழந்தையும் காயமின்றி உயிர் தப்பினர். தடுப்பூசி போடுவதற்காக இரண்டு மாத பேத்தியுடன் வந்த மூதாட்டியின் தலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!