தீபாவளியன்று சோகம்... 4 வயது குழந்தை உட்பட இருவர் பலி!

 
நவிஷ்மா

நேற்று நாடு முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் நேற்று பட்டாசு வெடித்த விபத்தில், 4 வயது குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை மயிலாப்பூரில் தீபாவளிக்கு வைத்த ராக்கெட் வெடி பறந்து விழுந்ததில் சாய்பாபா கோயிலின் கூரை பற்றி எரிந்தது. கோபுரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தென்னங்கூரை மற்றும் பசுமை வலையில் பட்டு தீ மளமளவென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Ranipet

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் மதுபோதையில் பட்டாசு வெடித்தபோது படுகாயமடைந்தவர், பரிதாபமாக உயிரிழந்தார். பாலாஜி என்ற அவர், மதுபோதையில் அணுகுண்டுகளை வெடித்தபோது, படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே, பட்டாசு விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு தீ, ரவிஷ்கா என்ற அச்சிறுமியின் மீது பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியை காப்பாற்ற முயற்சித்த அவரது பெரியப்பாவுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

Police

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விசைத்தறிக்கூடத்தின் மேற்கூரையில் பட்டாசு விழுந்து விபத்து ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பத்தில் பட்டாசு பறந்து விழுந்ததில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.

சென்னை வில்லிவாக்கத்தில் ராக்கெட் பட்டாசு ஆள் இல்லாத குடிசை வீட்டின் மீது வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்தது.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நிகழ்ந்த பட்டாசு விபத்தில், வீட்டில் அடுக்கி வைத்திருந்த சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஜவுளி நூல் எரிந்தது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web