திருமண நாளில் நடந்த சோகம்.. மணப்பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்த மணமகனின் நண்பர்கள்!

 
சீனா திருமணம்

சீனாவில் நடந்த சர்ச்சைக்குரிய திருமண விழாவில் மணமகனின் நண்பர்கள் சிலர் மணப்பெண்ணை தூக்கி சென்றில் கம்பத்தில் டேப் மூலம் கட்டி வைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருமண உடையில் இருந்த மணப்பெண் உதவிக்கு அழைத்தாலும் அருகில் இருந்தவர்கள் உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலரையும் கோபப்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து பேசிய மணமகனின் நண்பரான யாங், இது ஒரு "கேம்" வகை சடங்கு என்றும், மணமக்கள் இருவருக்கும் இது பற்றி முன்பே தெரியும் என்றும் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இது சீனாவின் சில பகுதிகளில் காணப்படும் பாரம்பரியத்தைப் போன்றது. திருமணத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் இதை அசாதாரணமான முறையில் பார்த்ததாக அவர் விளக்கினார்.

இதுகுறித்து ஒருவர் கமெண்டில் கூறியிருப்பதாவது, பிறர் படும் துன்பத்தைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடைவது வேதனை அளிக்கிறது. அதேபோல் மணப்பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பு என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது சடங்கு என்று கூறினாலும், மனதுக்குள் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணை கம்பத்தில் கட்டி வைப்பது மிகவும் கொடுமையானது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!