விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்.. விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்.. 3 பேர் படுகாயம்!

 
பிரியதர்ஷினி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ஆதி திராவிடர் காலனி சாலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாலையில் விளையாடிக் கொண்டிருந்த தேஜேஸ்வரன், பிரியதர்ஷினி, யாகவீர் ஆகியோரை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்துள்ளது.

வெறி நாய் 

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், நாயை விரட்டி, பலத்த காயமடைந்த 3 குழந்தைகளையும் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில், ரோட்டில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாவிடம் கேட்டபோது, அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெறிநாய் தொல்லையால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web