அருவியில் குளித்துக்கொண்டிருக்கும் போது நேர்ந்த சோகம்.. வெள்ளத்தில் மாயமான முதியவர்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்லும் மக்கள் கவனமாக இருக்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே முதியவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் ரியாஸ் கான் (62). இவர் தனது நண்பர்களுடன் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதிக்கு வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள உலக்கை அருவி அருகே உள்ள கால்வாயில் ரியாஸ் கான் உள்ளிட்டோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ரியாஸ்கான் மாயமானார். தகவலின் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் அடித்து செல்லப்பட்ட முதியவரை தேடி வருகின்றனர். குற்றாலத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் முதியவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
