தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த சோகம்.. பரிதாபமாக பலியான எஸ்.எஸ்.ஐ, தலைமை ஆசிரியர்!
புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம் (55). இவர் ஆலங்குடி போக்குவரத்து காவல் துறையில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். தற்போது லோக்சபா தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 15 நாட்களாக திருமயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருமயம் பேருந்து நிலையத்திற்கு சண்முகம் வந்தார்.

அப்போது பஸ்சில் ஏற முயன்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தருமபுரி வேடியப்பன் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் மல்லிக்குட்டை ஊராட்சி கமலாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் காரிமங்கலத்தை அடுத்த எத்தியனூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி 3வது மைய அலுவலராக நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். வாக்குப்பதிவு முடிந்து அன்று இரவு 10.30 மணியளவில் கணேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று காலை கணேசன் இறந்தார்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
