மாடு மீது மோதியதால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில் ... பயணிகள் கடும் அவதி!!

 
ரயில்

சென்னையிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு தினசரி மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.     கடற்கரை முதல் திருமால்பூர், செங்கல்பட்டு - அரக்கோணம் - செங்கல்பட்டு, பாண்டிச்சேரி - திருப்பதி செல்லும்   ரயில்கள் காஞ்சிபுரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை பயணிகள் ரய்ல் சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.  

ரயில்

 

பயணிகள் ரயில் காஞ்சிபுரத்தை அடுத்த பெரிய கரும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது   எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை கடந்த மாடு மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது. மாட்டின் கால்கள் ரயில் சக்கரத்தில் சிக்கிக் கொண்டன. இதனால்  ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல் ரயில் அங்கேயே நின்றுவிட்டது.  

 

மின்சார ரயில்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் சக்கரத்தில் சிக்கி கொண்டிருந்த கால்களை  போராடி அகற்றினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதே நேரத்தில் ரயில் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் சுற்றுவட்டாரத்தில் பெரும்  பரபரப்பு நிலவியது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web