ஆற்றில் சிக்கிய பயணி...சமயோசிதமாய் காப்பாற்றிய இளைஞர்கள்... வைரலாகும் வீடியோ!

 
ஆற்றில் சிக்கியவர்

நீச்சல் தெரிந்தாலுமே இந்த கோடை விடுமுறை காலங்களில் புது இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது, உங்கள் வீர தீர செயல்களை எல்லாம் வெளிப்படுத்தாமல் இயற்கையை அதன் போக்கில் அனுபவித்து விட்டு வரவேண்டும் என்கிற படிப்பினையைத் தான் இந்த சம்பவம் சொல்கிறது. பிரபல நீர்வீழ்ச்சியான ஒகேனக்கல் அருவி பகுதியில், எதிர்பாராமல் பாறையில் வழுக்கி விழுந்து, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது கோடை விடுமுறை காலங்கள் துவங்கியுள்ளதால், தமிழகம் முழுவதுமே பலரும் சுற்றுலா தலங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கும் ஆறு, அருவி போன்ற நீர் நிலைப் பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லத் துவங்கி உள்ளனர். மேலோட்டமாக பார்த்தால், நீர் நிலைகளில் நிரம்பி இருக்கும் தண்ணீர் எவ்வளவு ஆழம் என்பது தெரியாது. சமீபமாக நீர் நிலைகளான ஆறு, குட்டைகளில் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசலில் சவாரி செய்வதற்கும் தினந்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகல் வந்து செல்கின்றனர்.  அப்படி சென்னை கே.கே.நகரில் இருந்து ரகு என்பவர், தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாறையில் வழுக்கி விழுந்து ஆற்றில் ரகு அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட சுற்றுலா பயணிகளும் அவரது குடும்பத்தாரும் கூச்சலிட்டனர்.

water

உடனடியாக இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் சரவணன், ராஜசேகரன், அரவிந்த்குமார் ஆகியோர் தீயணைப்பு துறையினர் வரும் வரையில் காத்திருக்காமல் துரிதமாக செயல்பட்டு, ஆற்றில் குதித்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ரகுவைப் பத்திரமாக மீட்டனர். அங்கிருந்தவர்கள் ரகுவின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்களைப் பாராட்டினார்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web