நிலைதடுமாறி நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி... 4 பேர் படுகாயம்!!

 
லாரி

 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி   தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் போன்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்த ஊழியர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். அதில்  திருவண்ணமலையைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 10 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததனர். அப்போது  புனேவில் இருந்து  பைப்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.

விபத்து

இதில்   பணியில் ஈடுபட்டவர்கள் மீது  வேகமாக மோதி   லாரி கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் குள்ளகுடி பகுதியில் வசித்து வரும் 49 வயது  வெங்கடேசன், 48 வயது   அண்ணாமலை,  48 வயது  முருகன் அத்துடன் லாரியில் பயணம் செய்த தன்வே பூஜா 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.  

ஆம்புலன்ஸ்

உடனடியாக சக ஊழியர்கள் அவர்களை  மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web