லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது... கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தேக்கம்!

 
ஜூன் 28ம் தேதி கருப்பு தினம்! லாரி உரிமையாளர்கள் சங்கம்!

தமிழகம் முழுவதும் இன்று நவம்பர் 9ம் தேதி வியாழக்கிழமை லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். லாரிகள் இன்று ஓடாததால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைய துவங்கியுள்ளன. இது குறித்து லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

லாரிகள்

ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட  கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று  அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது. இந்த திடீர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 6 லட்சம் லாரிகள் ஓடாது. அத்துடன்  25 லட்சம் இலகுரக வாகனங்கள் ஓடாது என சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

கண்டெய்னர் லாரிகள் 2-வது நாளாக ஸ்டிரைக்
 இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவிப்பதாக  அறிவித்துள்ளது. இதனை மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்  உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி தமிழகம் முழுவதும், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது எனவும் தெரிவித்துள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web