சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கல் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

 
சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்குகள் திடீரென நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தமிழக  முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Image

இவர்கள் அனைவரது ட்விட்டர் கணக்குகளும் இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியிலான கோரிக்கைக்கு ஏற்ப இந்த கணக்குகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கீச்சு கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.#seeman #Twitter #itwingntk pic.twitter.com/gWlhf00khl

— கருணாகரன்.ச (@KKkarunagaran) May 31, 2023

இதற்கு முன்பாக தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள், நடிகை த்ரிஷா போன்ற பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web