திடீரென வெடித்த விமானத்தின் டயர்.. நூலிழையில் உயிர் தப்பித்த 148 பயணிகள்!

 
ஓமன் ஏர்லைன்ஸ் விமானம்

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பயணிகளுடன் புறப்பட்ட ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிக் கொண்டிருந்த போது விமானத்தின் டயர் வெடித்ததில் திடீரென தீப்பிடித்தது. விமானியின் திறமையால் விமானத்தில் இருந்த 157 பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை விமான நிலையம்

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 148 பயணிகள், 9 விமான பணிப்பெண்கள் என மொத்தம் 157 பேருடன் சென்னை வந்தது. நேற்று (அக்.05) பிற்பகல் 2 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தபோது விமானத்தின் பின்பக்க இடதுபுற டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதனால், விமானத்தில் ஏற்பட்ட அதிர்வுகளால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். ஆனால் விமானி விமானத்தை பத்திரமாக ஓடுபாதையில் தரையிறக்கினார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தின் விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தரைப் பணியாளர்கள், கிரவுண்ட் ஸ்டாப்பை வரவழைத்து, ஓடுபாதையில் நின்றிருந்த விமானத்தை இழுவை லாரிகள் மூலம் இழுத்து, விமான நிலையப் பகுதியில் நிறுத்தினர்.

அதன் பிறகு, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி, வழக்கமான குடியுரிமை சுங்கச் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் வெடித்து சிதறிய டயரை சரி செய்யும் பணியில் விமான நிலைய பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

வழக்கமாக இந்த விமானம் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு சென்னையில் இருந்து மஸ்கட் மதியம் 2.45 மணிக்கு புறப்படும். இதனால், மஸ்கட் செல்லும் இந்த விமானத்தில் 157 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று கூறிய அதிகாரிகள், அவர்களை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைத்தனர்.

பழுது ஏற்பட்ட பிறகு மாலை 6.30 மணிக்கு மேல் விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால். இன்று இரவு 7:30 மணியளவில் சென்னையில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் முழுமையாக பழுதுபார்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த 157 பயணிகள் சென்னை மாநகரில் உள்ள பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, விமானம் பழுது நீக்கப்பட்டு இன்று (அக்.06) காலை புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டிற்கு வந்த 157 பயணிகள் சென்னையில் சிக்கித் தவித்தனர். இருப்பினும், விமானி மற்றும் துணை விமானியின் திறமையான செயல்களுக்காக பயணிகள் பாராட்டி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!