பகீர் வீடியோ... 250 மாணவ, மாணவிகள்... அரைகுறை ஆடைகளுடன் போதையில் நடனம்... ரகசிய பார்ட்டியில் ரவுண்ட் கட்டிய போலீசார்!

உலகம் முழுக்கவே வரும் தலைமுறை தவறான பாதையில் பயணித்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது எங்கோ பாகிஸ்தானில் மட்டுமே நடந்த விஷயம் என்று அத்தனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. பல இடங்களில் அடுத்த தலைமுறை இப்படி சீரழிந்து வருகிறது. இது அவர்களின் தனிப்பட்ட குற்றமாகவும் கருத முடியவில்லை. சமூகம்... பெற்றோர், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படங்கள் என்று அவர்கள் வாழ்கிற, அவர்களை வழிப்படுத்துகிற நம் சமூகம் இப்படி தான் அவர்களுக்கு வழிகாட்டுகிறது என்பது தான் இதன் பின்னே இருக்கிற நிஜம்.
பாகிஸ்தானில் கராச்சி நகரில் இரவு பார்ட்டி ஒன்றில், அதிரடியாக நுழைந்த போலீசார் அதிர்ந்து போனார்கள். அந்த பார்ட்டியில் 250 மாணவ, மாணவிகள் அரைகுறை ஆடைகளுடன் போதையில் தள்ளாடியபடி நடனமாடிக் கொண்டிருந்தார்கள். வெறும் சரக்கு பார்ட்டி மட்டும் கிடையாது. தடைச் செய்யப்பட்ட போதைப் பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தியிருந்தது சோதனையில் தெரிய வந்தது. பார்ட்டி நடந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sons and daughters (all minor) of high-ranking army officers, bureaucrats, technocrats, and politicians of #Pakistan who talk of Islam and its values and force religious extremism on the masses were caught at a raid on a rave party in #Karachi.
— Amitabh Chaudhary (@MithilaWaala) October 27, 2023
All types of drugs and alcohol… pic.twitter.com/VDnqzz88qM
பங்களா ஒன்றில் பார்ட்டி நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி கிராமர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பார்ட்டியில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.
பார்ட்டியை நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதியும் பெறவில்லை. பங்களாவில் காவல்துறை ரெய்டு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரின் பிள்ளைகள் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் மதுபாட்டில்கள் அடுக்கி வைத்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக காவல்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரவு 11 மணிக்கு தொடங்கிய பார்ட்டி அதிகாலை வரை நடந்தது.
Kids belonging to families of high-ranking army officers, bureaucrats, technocrats, and politicians, caught at a rave party in Karachi. pic.twitter.com/V2sI3SOGKB
— Zillay Subhani (@Planet_Zootron) October 28, 2023
காவல்துறையினர் அதிகாலை 4 மணிக்கு ரெய்டு நடத்த சென்ற போதும் பார்ட்டி நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. பார்ட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால், அவர்கள் வீடியோவை வெளியிட்டது தவறு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரைகுறை ஆடையுடன், மாணவர்கள் நடனம் ஆடுவது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மதுவுடன் சேர்த்து மாணவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களையும் எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அனுமதி கோரி மாணவர்கள் கடிதம் கொடுத்ததாகவும், ஆனால் அதில் பார்ட்டியை யார் நடத்துகிறார்கள் என்ற எந்த விவரமும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பங்களா உரிமையாளர் காலித் கான், தடை செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்த அயன் கான் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!