பகீர் வீடியோ... ரயில் தண்டவாளத்தில் 7 கி.மீ. கார் ஓட்டிச் சென்ற இளம்பெண்!

 
தண்டவாளம் இளம்பெண் தண்டவாளத்தில் கார்

இன்று காலை ஹைதராபாத் அருகே இளம் பெண் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஹைதராபாத் அருகே ரங்காரெட்டி மாவட்டத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டிச் சென்ற அந்த இளம்பெண்ணின் செய்கையில் இன்று காலையில் அந்த ரயில் பாதையில் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

கொண்டக்கல்லில் உள்ள லெவல் கிராசிங் ஒன்றில், அந்த இளம்பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தில் திருப்பி, தண்டவாளத்தில் காரை ஓட்டத் தொடங்கினார். இந்த செய்கை அந்த பகுதியில் இருந்தவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. உள்ளூர்வாசிகள் உடனடியாக விரைந்து சென்று நகுலப்பள்ளி பகுதியில் அவரைத் தடுக்க முயன்றனர், ஆனால் இளம்பெண், தன்னைத் தடுக்க முற்பட்டவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வேகமாக ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நகுலப்பள்ளிக்கும் சங்கர்ப்பள்ளிக்கும் இடையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் காரை ஓட்டிச் சென்றார். அதே பாதையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ரயில், எதிர் திசையில் வேகமாக கார் வந்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் லோகோ பைலட் உடனடியாக சமயோசிதமாக பிரேக் போட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அந்த இளம் பெண்ணின் செயல் ரயில்வே ஊழியர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. பின்னர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் ரயில்வே ஊழியர்கள் காரை நிறுத்தி, அந்த இளம்பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அந்தப் பெண் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ரவிகா சோனி என அடையாளம் காணப்பட்டார். அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ரீல்கள் தயாரிப்பதற்காக அவள் அப்படிச் செய்தாளா என்பதைக் கண்டறிய போலீசார் அவரிடம் விசாரித்தனர். அதன் பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். அவரைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டனர்.

தண்டவாளத்தில் கார்

இளம்பெண்ணின் செய்கை குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பெண்ணின் செயலால் ஹைதராபாத்-பெங்களூரு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் சில ரயில்கள் நிறுத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாரும் விசாரணையைத் தொடங்கினர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் நர்சிங்கியிலிருந்து கொண்டக்கல்லை அடைந்ததாகவும், ரயில்வே கேட்டைக் கடப்பதற்குப் பதிலாக, வாகனத்தை தண்டவாளத்தில் திருப்பியதாகவும், இதனால் பீதி ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது