பகீர் வீடியோ.. டெபாசிட் பணம் கொடுக்காததால் ஆத்திரம்.. ஓனர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய நபர்!

 
ஆனந்த் தாக்கூர்

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஒரு வீட்டில் வசித்த ஒருவர், டெபாசிட் தொகையை செலுத்த மறுத்ததால், வீட்டு உரிமையாளரின் வீட்டை நோக்கி வெடிகுண்டுகளை வீசியதாகவும், துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஜபல்பூரின் காமாபூர் பகுதியில் உள்ள பாரத் கிரிஷி சமாஜ் பள்ளிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் ஆனந்த் தாக்கூர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


இது தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகளில், ஆனந்த் தாக்கூர் இரு கைகளிலும் வெடிகுண்டுகளுடன் நடந்து சென்று குடியிருப்புக்கு வந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக வெடிகுண்டுகளை வீசுவது போல் தெரிகிறது. ஒரு வெடிகுண்டு வெடிக்கத் தவறியது மற்றொன்று வெடித்து புகை மேகங்களை உருவாக்கியது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன. முன்னதாக, அருகில் உள்ள கோவிலில் வழிபாடு செய்த ஆனந்த் தாக்கூர், வீட்டின் உரிமையாளர் மான் சிங் தாக்கூர் வீட்டின் மீது வெடிகுண்டுகளை வீசிய காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

ஆனந்த் தாக்கூர், குடியிருப்போர் மட்டுமின்றி, தொழிலதிபர்களிடம் இருந்தும் பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த் தாக்கூரை தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web