பகீர் வீடியோ.. நாய் கடிக்க வந்ததால் ஆத்திரம்.. ஓனருக்கு தர்ம அடி கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்!

 
ஸ்ரீநாத்

ஹைதராபாத்தில் வளர்ப்பு நாயை பலரை கடித்ததால் நாய் உரிமையாளரும், அவரது மனைவியும் அடித்து உதைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத் மதுராவில் உள்ள ரஹ்மத் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீநாத். இவர் ஹஸ்கி என்ற நாயை வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் தனஞ்சய்.


இந்நிலையில் வளர்ப்பு நாயை அவிழ்ப்பது தொடர்பாக மேற்கண்ட இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாயை ஸ்ரீநாத் வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். பக்கத்து வீட்டுக்காரரை நாய் கடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தனஞ்சயின் குடும்பத்தினர் மீண்டும் கோபமடைந்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தனஞ்சயின் குடும்பத்தினர் ஸ்ரீநாத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதைப் பார்த்து ஓடி வந்த ஸ்ரீநாத்தின் மனைவியும் தாக்கப்பட்டார். இச்சம்பவம் மே 8ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இச்சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். மேலும், வளர்ப்பு நாயும் தாக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web