பகீர் வீடியோ.. லிப்டில் வைத்து வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல்.. பராமரிப்பாளர் வெறிச்செயல்!

 
நாய்

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஆர்சிட் கோல்டன் சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விதித் சர்மா வசித்து வருகிறார்.   இவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாயை வளர்த்து வருகிறார். நாயுக்கு உணவளிக்கவும், நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லவும், குளிப்பாட்டவும் ஒரு இளைஞனை அமர்த்திக்கொண்டார். அந்த இளைஞன் வளர்ப்பு நாயை கவனித்துக் கொண்டிருந்தார்.


இந்நிலையில் நாயை வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்ல வந்துள்ளார். பின்னர் அதை லிப்டில் வைத்து இரும்பு கம்பியால் நாயின் முகத்தில் அடிக்க ஆரம்பித்தார். நாய் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அடிகளை எடுத்துக்கொண்டே இருந்தது. அப்போது லிப்ட் கதவு திறந்தவுடன் அந்த வாலிபர் நாயை அடிப்பதை நிறுத்திவிட்டு நாயை வெளியே எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த நாய் உரிமையாளர் அந்த இளைஞனை திட்டி அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளார். ஆனால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நாய்க்கடியால் மக்கள் மற்றும் குழந்தைகள் படுகாயம் அடைந்து பலியாகிய செய்திகள் மத்தியில், வளர்ப்பு நாயை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web