பகீர் வீடியோ... அரசுப்பள்ளியில் பெண்கள் ஆபாச நடனம்.. மது விருந்துடன் எல்லை மீறிய நிகழ்ச்சி!

 
பகீர் வீடியோ... அரசுப்பள்ளியில் பெண்கள் ஆபாச நடனம்.. மது விருந்துடன் எல்லை மீறிய நிகழ்ச்சி!

அரசு பள்ளியில், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் பெண்கள் ஆபாச மற்றும் குடிபோதை நடனமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சஹர்சா மாவட்டத்தின் ஜலாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பொழுதுபோக்கிற்காக இசைக்குழு மற்றும் சில பார் நடன பெண்கள் வரவழைக்கப்பட்டு ஆபாச நடனமாடியுள்ளனர்.



திருமண ஊர்வல நிகழ்ச்சிக்காக பள்ளி வளாகத்தில் இந்த நடன நிகழ்ச்சி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில், போஜ்புரி பாடல்களுக்கு நான்கு பெண்கள் ஆபாச நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு சில ஆண்கள் குடித்துவிட்டு, அந்தப் பெண்களுடன் நடனமாடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அரசுப் பள்ளியில் இதுபோன்ற விழாவை நடத்த கல்வித்துறை அனுமதித்தது எப்படி என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஜலாய் காவல் நிலைய பொறுப்பாளர் மம்தா குமாரி கூறுகையில், “இதுபோன்ற எந்த நிகழ்ச்சிக்கும் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. வைரலான வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web