வைரலாகும் வீடியோ... மேடையில் நடிகை ஜெனிபர் லோபஸ் ஆடை அவிழ்ந்து விழுந்த அதிர்ச்சி!

 
ஜெனிபர் லோபஸ்

அமெரிக்காவின் பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ். நடிகை, நடன கலைஞர் மற்றும் தொழிலதிபர் என பன்முக தன்மை கொண்ட ஜெனிபர் லோபஸ், ஆசியா மற்றும் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், போலந்து நாட்டின் வார்சா நகரில் நடந்த நிகழ்ச்சியில்  மேடையில் லோபஸ் பாடியபடியே நடந்து சென்றபோது, இடுப்பில் அவர் அணிந்திருந்த மெல்லிய ஆடை திடீரென அவிழ்ந்து, கீழே விழுந்து விட்டது. அதனை உடனடியாக பிடிக்க முயற்சித்தார்.  அதற்குள் அந்த வெள்ளி வண்ண ஆடை தரையை தொட்டு விட்டது 


இதனை பார்த்து சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஆனால், ரசிகர்கள் மத்தியில் இருந்து கோஷம் எழுந்தது. ஏனெனில், அடுத்து அவர் நடந்து கொண்ட விதம்தான் அதற்கு காரணம். அந்த ஆடை கீழே விழுந்தபோதும், மனம் தளராமல் இருந்த லோபஸ், அதற்கேற்ப ஒய்யார போஸ் ஒன்றை கொடுத்து புன்னகையையும் தவழ விட்டார். பின்னர் சிறிது தூரம் பாடியபடியே மேடையில் நடந்து சென்றார். இதன்பின்னர், ஆடவர் ஒருவர் கீழே விழுந்த ஆடையை எடுத்து வந்து மீண்டும் இடுப்பில் கட்டி விட்டார். 

ஜெனிபர் லோபஸ்

அவருடைய இந்த சமயோசித செயல் மற்றும் சூழலை கையாண்ட விதம் இவைகளுக்காக  நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை பதிவிட்டு  வருகின்றனர். உள்ளாடையுடனும், இரு கைகளிலும் உறையுடனும், மைக்கை பிடித்தபடி அவர் மேடையில் நடந்து சென்றபடியே, சிரித்து கொண்டே பார்வையாளர்களை பார்த்து பேசுகிறார். என்னை இந்த ஆடையை அணியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நான் உள்ளாடைகளை அணிவதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியில் நல்ல வேளையாக அணிந்து வந்தேன் என நகைச்சுவையாக கூறிவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?