வைரலாகும் வீடியோ... நடிகை மிருணாள் தாக்கூர் காதலருடன் பார்ட்டியில் பங்கேற்பு!

 
மிருணாள்

நடிகை மிருணாள் தாக்கூர், பிரபல பாலிவுட் பாடகர் ஒருவருடன் பார்ட்டியில் கை கோர்த்தபடியே செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அவர் காதலில் விழுந்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாக்கூர் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இவர் நடித்த ‘ஜெர்ஸி’, ‘சீதா ராமம்’, ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ ஆகியவை இவருக்கு இந்தியா முழுவதும் பார்வையாளர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. தற்போது தெலுங்கில் நானியுடன் ‘ஹாய் நானா’, ‘ஃபேமிலி ஸ்டார்’, இந்தியில் ‘பூஜா மேரி ஜான்’ போன்ற படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் ஷில்பா ஷெட்டி வீட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி கெட் டூ கெதர் பார்ட்டி நடந்திருக்கிறது. இதில் நடிகை மிருணாள் தாக்கூரும் கலந்து கொண்டு இருக்கிறார். அவருடன் பிரபல பாலிவுட் ராப்பரும், பாடகருமான பாட்ஷாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

இவர் ஷில்பா ஷெட்டியுடன் ‘இந்தியா காட் டேலண்ட்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருகிறார். இவருடன் தான் மிருணாள் கைகோர்த்து ஒன்றாக பார்ட்டியில் வலம் வந்துள்ளார். இந்த வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாட்ஷா மற்றும் ஷில்பா ஷெட்டியுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து மிருணாள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘எனக்குப் பிடித்தமான இரண்டு பேர்’ என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியான பாட்ஷாவின் வீடியோவான ‘பேட் பாய் X பேட் கேர்ள்’வில் மிருணாள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிருணாள் தாகூர்

இதற்கு முன்பு பஞ்சாபி நடிகை இஷா ரிக்கியுடன் பாட்ஷா திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் வந்தபோது அவர் அதை மறுத்தார். பாட்ஷாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஜாஸ்மின் என்பவரை மணந்தார்.

இந்த தம்பதிக்கு ஜெஸ்மி கிரேஸ் மசிஹ் சிங் என்ற பெண் குழந்தை 2017-ம் ஆண்டு பிறந்தது. ஆனால், இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், மிருணாளுடன் பாட்ஷா டேட் செய்கிறாரா என்ற சந்தேகத்தை இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web