வைரலாகும் வீடியோ... வெளிநாட்டு வாடிக்கையாளரை நடனமாடி வரவேற்ற இந்திய பணியாளர்கள்!
சமூக வலைதளங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் வெளிநாட்டு client ஒருவர் இந்தியாவில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு வருகை புரிந்த நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அவரை நடனமாடி வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
India should stop chaprification of corporate offices
— Woke Eminent (@WokePandemic) July 21, 2025
This is so pathetic to see Indian girls dancing in office an d welcoming a foreign client and the becahra client also forced to dance.
Such showcasing will only make other countries feel Indian offices are causal and not… pic.twitter.com/gpA9kXY4GJ
அந்த வீடியோவில் வெளிநாட்டு client நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஊழியர்கள் நடனம் ஆடத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பாடல்களுக்கு நடனமாடிய நிலையில் வெளிநாட்டு client அவர்களின் நடனத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவர்களின் நடனத்தை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.

இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி ஒருவர் “பணியாளர்கள் அலுவலகத்தில் நடனமாடி தான் வெளிநாட்டு client ஐ வரவேற்க வேண்டுமா? நடனம் ஆடாத மற்ற பணியாளர்கள் பழிவாங்கப்படுவார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
