வைரலாகும் வீடியோ... கறுப்புக்கொடி காட்டியவருக்கு சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி!
பீகார் மாநிலம் ஆர்ரா பகுதியில் ராகுல்காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்தபடி கறுப்புக்கொடி காட்டிய நபருக்கு ராகுல் காந்தி சாக்லேட் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து, வாக்காளர் அதிகாரம் என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17ம் தேதி முதல் யாத்திரை நடத்தி வருகிறார். சசாரமில் தொடங்கிய இந்த யாத்திரை, நாளை பாட்னாவில் நிறைவடைகிறது.
#WATCH | Arrah, Bihar: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi offered candies to BJYM workers who showed him black flags and confronted him over the alleged derogatory remarks made against the Prime Minister and his late mother at a Mahagathbandhan event in Darbhanga. pic.twitter.com/dkFXz8WJeB
— ANI (@ANI) August 30, 2025
இந்தநிலையில் ஆர்ரா பகுதியில் பிரசாரத்தில் ராகுல்காந்தி ஈடுபட்ட போது, பாஜக இளைஞர் அணி செயற்பாட்டாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி அசைத்தும், அவரை எதிர்த்து கோஷமிட்டும் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தியின் வாகனம் சென்றபோது, கருப்பு கொடி காட்டிய பாஜக இளைஞர்களில் ஒருவரை ராகுல் காந்தி அருகில் அழைத்தார். அவருடன் சுருக்கமாக பேசிய பின், அவருக்கு சாக்லெட் கொடுத்து அனுப்பினார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நவாடாவில் யாத்திரை சென்ற ராகுல் காந்திக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபோது, அவர் சிரித்தபடியே பறக்கும் முத்தம் கொடுத்து எதிர்த்து நின்ற கூட்டத்தில் பதற்றத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

டர்பாங்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது மறைந்த தாயாரையும் குறை கூறியதாக காங்கிரஸ் மீது பாஜக குற்றஞ்சாட்டியது. இதையடுத்து பாட்னாவில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், காங்கிரஸ் செயற்பாட்டாளர் முகமது ரிஸ்வி கைது செய்யப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
