வைரலாகும் வீடியோ... அடுத்தடுத்து 25 நாய்கள்... கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக சுட்டுக் கொன்ற நபர்!
கையில் துப்பாக்கியுடன் அடுத்தடுத்து 25 நாய்களை வெறித்தனமாக சுட்டுக் கொன்று அதை வீடியோவாகவும் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கோரி புகாரளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் நாவல்கர் பகுதியில் குமாவாஸ் கிராமத்தில் நடந்த சம்பவம் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
राजस्थान झुंझुनू जिले के कुमावास गांव की घटना सरेआम कुत्तों को गोली से मार दिया गया पुलिस प्रशासन मौन कानून की धज्जिया उडा दी गई कृपया करके पुलिस तुरंत कार्रवाई करें @RajPoliceHelp @PoliceRajasthan @JhunjhunuPolice @DMJhunjhunu @RajCMO @PetaIndia @SupremeCourtIND pic.twitter.com/7y3wD3IlYz
— NARGIS BANO (@NARGISB75145697) August 3, 2025
கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்து, நாய்களை நேரில் பார்த்தவுடன் சுட்டுக்கொலை செய்வது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நாய்கள் ரத்தம் வடிந்த நிலையில் சாலையோரத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த வீடியோ குறித்து ஹெட் கான்ஸ்டபிள் சுப்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடமான குமாவாஸ் கிராமத்துக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் தும்ரா கிராமத்தில் வசித்து வரும் சூரஜ்ராம் பவாரியாவின் மகன் ஷ்யோசந்த் பவாரியா என்பவரே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இதே வேளை, ஹமிரி கலான் என்ற கிராமத்தின் முன்னாள் சர்பஞ்ச் சரோஜ் ஜஞ்ஜாரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், “கொலை செய்யப்பட்ட நாய்கள் யாரையும் தாக்கவோ, மிரட்டவோ இல்லை; ஆடுகளை கொலை செய்வதாக கூறியது பொய்யான காரணம். நஷ்ட ஈடு கேட்பதற்காக திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கக் கூடும். இதே குழுவினர் 5 மாதங்களுக்கு முன்பும் இதே கிராமத்தில் வந்திருந்தனர் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
