வைரலாகும் வீடியோ... முதலையின் பற்களில் தட்டி டின் பீர் திறக்கும் இளைஞர்!

 
முதலை

அமெரிக்காவில் டின் பீர் திறப்பதற்காக முதலையின் பற்களில் தட்டி, திறந்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகில் சென்ற வாலிபர் ஒருவர் பீர் கேனை திறப்பதற்காக முதலையின் உதவியை நாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. 27 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது கையில் ஒரு பீர் கேனுடன் அமர்ந்துள்ளார்.


அந்த கேனை திறக்க கஷ்டப்படும் அவர் படகில் இருந்து உணவு பொருளை ஆற்றில் வீசுவது போல காட்சி உள்ளது. அப்போது படகு அருகே ஒரு முதலை வருகிறது. இந்நிலையில் முதலை படகை நெருங்கியதும் அந்த வாலிபர் முதலையின் வாயில் பீர் கேனை வைப்பது போன்றும், முதலை அதை கடித்ததால் பீர் கேனை திறப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.

FLorida

பின்னர் அந்த பீர் கேனை வாலிபர் தனது நண்பர்களுக்கு கொடுக்க அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ‘கேட்டரை கேன் ஓப்பனராக பயன்படுத்துதல்’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி 31 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web