பகீர் வீடியோ... விஷமான பிரியாணி... சுட வைத்து பரிமாறும் உணவகம்... ஸ்வீட்களில் நெளியும் புழு!

 
பிரியாணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து உள்ள தேவிகாபுரம் பஜார் வீதியில் பல பிரியாணி கடைகள், பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவிகாபுரம் பஜார் வீதியில் ஒரு அசைவ உணவகத்தில் விற்பனையாகாமல் மீதி இருந்த பழைய பிரியாணியை மீண்டும் சூடு செய்து அவற்றை புதிய பிரியாணியுடன் கலந்து விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி வைரலானது.

இதேபோன்று இப்பகுதியில் உள்ள பேக்கரிகளில் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் கேக் லட்டு போன்ற இனிப்பு வகைகளில் புழு உருவாகி உள்ளது. மேலும் ஈக்கள், தேனீக்கள், வண்டு ஆகியவை நெளிந்து கொண்டிருப்பதும் வீடியோ வைரலாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்களை பார்க்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இங்கு அசைவ ஓட்டகளில் பழைய உணவுகளை சூடு செய்து விற்பதும், சிக்கன் போன்றவைகள் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பாஸ்ட்புட் வகைகள் விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. 

Briyani

இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம்  தலையீட்டு விரைந்து  நடவடிக்கை எடுத்து தரமற்ற முறையில் உணவு திண்பண்டம் செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web