பகீர் வீடியோ.. அரசு தலைமையகத்தில் அதிர்ச்சி.. மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்!

மும்பையில் உள்ள மந்த்ராலயா கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை மும்பை போலீசார் உறுதி செய்தனர்.
#WATCH | Man jumps from the upper floor of the Mantralaya (the administrative headquarters of Maharashtra govt in Mumbai), lands in safety net installed in the building; police reached the spot to rescue the man. Further details awaited
— ANI (@ANI) June 6, 2024
(Visuals confirmed by police) pic.twitter.com/MIhZiDH4hY
மும்பையில் உள்ள மகாராஷ்டிர அரசின் தலைமையகமான மந்த்ராலயா கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து அந்த நபர் குதித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வலையில் விழுந்ததால் அந்த நபரின் தற்கொலை முயற்சி தவிர்க்கப்பட்டது.
உடனடியாக அவர்கள் எச்சரிக்கப்பட்டதையடுத்து, போலீசார் அந்த நபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!