பகீர் வீடியோ... லாரி சக்கரத்தில் திடீரென பாய்ந்த நபர்... உடல் நசுங்கி பலியான சோகம்!

 
லாரி சிசிடிவி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசித்து வருபவர் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி . இவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா மார்க்கெட்டில் நிலேஷ் பவேஷ்பாய் என்பவர் நின்று கொண்டிருந்தார்.  

தேநீர் கடைக்கு முன்பாக தனது பைக்கில் நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையில் சென்ற லாரியின் பின்புற சக்கரத்தின் கீழே தானாக ஓடி சென்று விழுந்து விட்டார். அதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை காப்பாற்ற முயற்சி செய்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நிலேஷ் அம்ரேலி மாவட்டத்தில் வசித்து வருபவர்  கடந்த சில வருடங்களாக தனது சகோதரருடன் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம்  குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

பள்ளி மானவி தற்கொலை

அதில் அவரது கைபேசியில்  தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பாக தனது சகோதரியின் மாமாவிற்கு “மாமா வாங்க” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்த   சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம்  பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?