அலறியடித்த நோயாளிகள்... மருத்துவமனைக்குள் ஸ்கூட்டியை ஓட்டிச் செல்லும் செவிலியர்... வைரலாகும் வீடியோ!

 
செவிலியர்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் செவிலியர் கருப்பு கண்ணாடி அணிந்து ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்கூட்டரில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதையில் ஒரு நோயாளி அமர்ந்திருக்கிறார், மேலும் பலர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.


இதற்கு நடுவே அந்த நர்ஸ் பைக்கில் சென்று வேறு வார்டுக்கு செல்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாவட்ட மருத்துவமனையின் ஸ்டாஃப் செவிலியர் ஸ்கூட்டரில் மருத்துவமனையை சுற்றி ஓட்டிய வீடியோ காட்சி எங்கும் வைரலாகி வருகிறது. இந்தத் தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிந்திருப்பதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

செவிலியரின் நடத்தைக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செவிலியர் ஸ்கூட்டியில் வார்டுக்கு வார்டு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web