பகீர் வீடியோ.. வந்தே பாரத் ரயிலில் திடீரென ஒழுகிய நீர்.. ஷாக்கான பயணிகள்!

 
வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதும் அதிவேக ரயில் சேவைகளுக்காக முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வாரணாசிக்கு பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலின் மேற்கூரையில் இருந்து திடீரென தண்ணீர் கொட்டியது.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, அதற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ரயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், ரயிலில் தண்ணீர் ஒழுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரயில்வே துறையின் அலட்சிய போக்கு தான் காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web