பகீர் வீடியோ.. சுற்றுலா சென்றபோது விபரீதம்.. நீர்வீழ்ச்சியில் அடுத்தடுத்து அடித்து செல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்கள்!

 
புஷி அணை விபத்து

புனேவின் ஹடாப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கான் ஆகியோரின் குடும்பத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 19 பேர் மழைக்கால சுற்றுலாவுக்காக ஞாயிற்றுக்கிழமை லோனாவாலாவுக்கு தனியார் வாகனத்தில் வந்தனர். இதில் சமீபத்தில் கடந்த ஜூன் 22ம் தேதி திருமணம் செய்து கொண்ட ஜோடியும் இருந்துள்ளனர்.


இவர்கள் அனைவரும் லோனாவாலாவில் உள்ள புஷி அணைக்கு பின்புறம்  அமைந்துள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது கனமழை காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் 10 சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஐவர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மற்ற ஐவரும் அணை நீரை இணைக்கும் நீர்த்தேக்கத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவில், பாதிக்கப்பட்டவர்களுடன் சுமார் 10 பேர் வெள்ளத்தின் நடுவில் சிக்கி, உதவி கேட்டு அலறுகிறார்கள். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் வெள்ளம் பெருக்கெடுத்ததால், இரண்டு குழந்தைகளை சுமந்த பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். மீதமுள்ளவர்கள் அவர்களுக்குப் பின் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மூன்று கட்டங்களாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ​​ஒரு நாள் கழித்து, திங்கள்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டன. மாலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் ஒன்பது வயது சிறுமி மரியா அகில் சையத் மற்றும் நான்கு வயது அட்னான் சபாஹத் அன்சாரி என அடையாளம் காணப்பட்டதாக லோனாவாலா நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சுஹாஸ் ஜக்தாப் தெரிவித்தார். மேலும் சம்பவம் நடந்த இடம் இந்திய ரயில்வே மற்றும் வனத்துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட "தடைசெய்யப்பட்ட பகுதி" என்று போலீசார் கூறியது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web