தொடரும் யுத்தம்... திருச்சி சிவா மருமகனைத் தேடும் போலீசார்... அமைச்சர் நேருவுடன் மீண்டும் மோதலா?!

 
திருச்சி சிவா

நெருப்பு அணைந்தாலும், உள்ளே இன்னமும் கனன்று கொண்டிருப்பதைப் போல... மழை விட்ட பின்னரும் மரங்களில் இலைகளில் மழைத் துளிகளைத் தூவிக் கொண்டிருப்பதைப் போல திருச்சி திமுகவில் இன்னமும் நீரு பூத்த நெருப்பைப் போலவே ஈகோ யுத்தம் தொடர்ந்து கொண்டிருப்பதாய் கவலைப்படுகிறார்கள் உடன்பிறப்புகள். திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள்.. ஒரு எம்.பி. ஆனாலும் மூவருக்குள்ளும் ஈகோ யுத்தம் தொடர்கிறதாக பேச்சு வலம் வந்து கொண்டிருக்கிறது. மூவருமே வெவ்வேறு பாதைகளில் பயணிப்பவர்கள்.

திருச்சி சிவாவின் மருமகனைப் போலீசார் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களுக்கும், திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே எழுந்த பிரச்சனையைப் பெரிசாக்கியது சிவாவின் மருமகன் தான் என்கிறார்கள் திருச்சி திமுகவினர். இத்தனை வருடங்களாக போஸ்டரில் பெயர் இல்லாததை எல்லாம் பெருசாக கண்டுக்கொண்டதில்லை திருச்சி சிவா. ஆனால், இம்முறை திடீரென இதைப் பெரிதாக்கி பிரச்சனையை வளர்த்தது திருச்சி சிவாவின் மருமகன் முத்துக்குமார். அமைச்சர் நேரு, சிவாவின் வீட்டிற்கே சென்று சமாதானம் பேசியும், முத்துக்குமார் தனியே தொடர்ந்திருக்கும் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்கிறார்கள். சரி எதற்காக வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். விவரமா கேட்கலாம் வாங்க. 

திருச்சி சிவா மருமகனை காவல் துறையினர்  வலைவீசித் தேடி வருகிறார்களாம். சரி  அப்படி என்ன தான் பிரச்சனைன்னு தானே கேட்குற? முதலில் அவரது கதையை கேளு.

சொலுங்கோ... சொல்லுங்கோ... திருநாமம் முத்துக்குமார் என்பது தான். அவர்கள் குடும்பமே காராத்தே கலையில் கைதேர்ந்தவர்கள் என்பதால் நாமகரணத்திற்கு முன் கராத்தே ஒட்டிக் கொண்டது.  கராத்தே முத்துக்குமாராக அடையாளப்படுத்திக் கொண்டார். தெருவில் ஜோதிடம் பார்ப்பவர்கள் விவிஐபிக்களுக்கு ஜோதிடம் பார்ப்பதைப் போல படத்தை தொங்க விட்டு இருப்பார்களே ... பார்த்திருக்கீயா? அப்படித் தான் இவருடைய முகநூல் பக்கம் முழுவதும் பிரபலங்களுடனான புகைப்படங்கள் நிறைந்து இருக்கும். அப்படி ஒரு விளம்பரப் பிரியர். ஜோதிடரா என்ன தொழில் செய்கிறார்?

மஹா, ஆக்க பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காதே அப்படிங்கற கதையா இல்ல இருக்கு. நான் சொல்லி முடிக்கிற வரை ம்.. ஓ... ஓஹோ, சரி சரி... அப்படிங்கற வார்த்தைய தவிர வேற எதுவும் உன் வாயில இருந்து வரக் கூடாது.. அப்புறமா சொல்ல வந்த விஷயத்தை மறந்துடுவேன். சரியா?

ம்..ம்... என்று கவனமாக கேட்க ஆரம்பித்தான் மஹா.

திருச்சி சிவா முத்துக்குமார்
சிவாவின் மகள் காயத்ரி... காராத்தே க்ளாஸ் போகும் பொழுது கரெக்ட் பண்ணிட்டான் அம்பி முத்துக்குமார். அது ஊருக்கே தெரிஞ்சு அசிங்கமாகிப் போக வானத்துக்கும் பூமிக்கும் அப்பாவும் மகனும் எகிற, அப்போ தமிழ் மாநில காங்கிரஸ்ல இருந்ததால சுமுகமா பேசி முடிச்சுட்டா.

ஓஹோ...!

அதுக்கப்புறம் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு தனியா இருந்தா. இரண்டாவது  மகள் டாக்டர். மகளுக்கு கலைஞர் தலைமையில் பழனி பஞ்சாமிர்த்தம் விக்கறவா மகனுக்கும் சம்மந்தம் பேசி முடிச்சுட்டார் சிவா. மகள் டாக்டரா இருந்ததால டாக்டர்  பையனையே திருமணம் செய்து கொடுத்துட்டார் அப்படினு சொல்றா. அப்புறம் மகனுக்கு றெக்கை முளைச்சு அதுவும் காதலித்த கிளியோட ஆத்த விட்டே பறந்து போயிடுத்து.

ஓஹோ... அதுவும் காதல் கல்யாணம் தானா?

இது தான் சமயம்னு பார்த்த கராத்தே... சரியாக காயை நகர்த்தி பெவிக்கால் போட்ட மாதிரி மாமனாரோட ஒட்டிட்டுட்டான். அப்புறம் திமுகவிலேயே தன்னையும் இணச்சுண்டு ஆவின் பால் பூத் உட்பட சில பல வேலைகளை செய்ய ஆரம்பிச்சுட்டன்.

அதெல்லாம் சரி மெயின் பிச்சரை ஓட்டுங்கோ..

மஹா நான் ஆரம்பத்திலேயே என்ன சொன்னேன்...

சரி சரி மன்னிச்சூ...

திருச்சி சிவா முத்துக்குமார்

நேரடியா சப்ஜெட்டுக்கு வந்துடுறேன். மாநகராட்சிக்கு எதிர்த்தாப் போல ஆவின் கடை வச்சு நடத்திண்டு இருக்கார் மருமகன். அங்கே கடந்த 3.5.23 தேதி இரவு 10 மணி வாக்கில் திருச்சி ஜி.எச்.சில் இருந்து விஜயசாரதி என்பவர் வாகனத்தை திருடிவிட்டதாகவும் பொதுமக்கள் பிடித்த போது அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும்  தகவல் தெரிந்த உடனே  அவர் மனைவி ஜி.எச்.க்கூப் போய் பார்த்திருக்கார். அவரது கணவர் மயக்க நிலையில் இருந்துருக்கார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்ததால எதுவும் கேட்க முடியல. பின்னர் கண் விழித்த போது நடந்தது என்ன என்று தனது கணவரிடம் கேட்டிருக்கிறார்.

அப்பொழுது தான் உண்மை ஊருக்கு தெரிஞ்சு இருக்கு. ஆவின் பால் பூத் வாசலில் வெளியே நின்று கொண்டு இருந்தவரை  TVS XL வண்டி சாவியுடன் நின்றதாகவும் அதை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த கார்ப்பரேசன் ஆபிஸில் நிறுத்தி விட்டு ஓனர் வருவதற்காக காத்திருந்த போது சிலர் வந்து ஏன்டா வண்டியை திருடுன என்று கேட்டதாகவும், அப்போது வக்கீல் கராத்தே முத்துகுமார் ஆளுங்க  நாங்க என்று சொல்லி என்னை அவரது காரில் தூக்கி ஏற்றிக்கொண்டு அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்கள் என்றும், அங்கு ரூமில் வைத்து கராத்தே முத்துகுமாருடன் வந்த 3 பேரும், XL யை நிறுத்திய நபரும் என்னை கம்பு இரும்பு பைப்பை கொண்டு தாக்கியதாகவும் சொல்ல அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை . நான் எப்படி GH வந்தேன். உனக்கு யார் தகவல் சொன்னது என்று எனக்கு தெரியலையே என அப்பாவியாக கேட்டிருக்கிறார். இது தான் நடந்தது.

அவருக்கு மருத்துவர்கள் வலது கை உடைந்திருப்பதாகவும் இடது கையில் விரல் உடைந்திருப்பதாகவும் மற்றும் உடல் முழுவதும் அடித்தற்கான காயங்கள் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர். அதோட கொடுமை மருத்துவமனையில் இருக்கும் பொழுதே எனக்கு அலைபேசி வாயிலாகவும் மர்மநபர்கள் நீ அண்ணன் பேர யார்கிட்டயாவது சொன்னா உன் புருசன் உனக்கு கிடைக்க மாட்டான் என அவரது மனைவியை வேறு மிரட்டி இருக்கா. அதுல இன்னொரு கொடுமை அவாளும் காதல் திருமணம் செய்து கொண்டு திருச்சிக்கு வந்து 18 வருடங்கள் ஆகிடுத்தாம்.

ஏன் தலைவரே ரெண்டாம் பாகம் எடுக்கலாம் போல இருக்கே? 

மஹா நான் என்ன சொன்னேன்?

சரி.. சரி.. கோவிச்சுக்காம மேலே சொல்லுங்கோ...

அதனால யார்கிட்டேயும் சொல்ல முடியலனு கதறி அழுதமயமா இருந்திருக்கா. காவலர்கள் பலமுறை வந்து எனது கணவரை பார்த்து நடந்தது பற்றி கேட்டதற்கு  நானும் அவரும் நாங்கள் புகார் ஏதும் அளிக்கவிரும்பவில்லைனு எழுதி கொடுத்துட்டா. ஆனாலும் விஷயம் இப்ப பெரிசானதுனாலே இப்ப திருச்சி செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்துல Cr.No: 269/2023 U/S 147,148,342,365,323,324,506(ii) மொத்தமா ஏழு பிரிவுல வழக்கு பதிச்சு இருக்கா. இதுல கடைசி செக்‌ஷன் மட்டும் நான் பெயிலபிள் என்பதால் ராஜ்ய சபா எம்.பி சிவா மருமகனை போலீசார் தேடிண்டு இருக்கா போதுமா?

அப்படினா அடுத்தது ரெண்டாவது பாகம் உண்டுனு சொல்லுங்கோ.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தா என்ன வேணும்னாலும் பண்னலாம்டா படுவா என்று கூறியப்படியே அடுத்த வேட்டைக்கு கிளம்பினார். இது குறித்து கராத்தே முத்துக்குமாரிடம் கேட்ட போது, உட்கட்சி பூசலால் என் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன் என ரத்தின சுருக்கமாக முடித்து கொண்டார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web