நடுரோட்டில் கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரம்... அலறியடித்து கூச்சலிட்ட பயணிகள்!

 
பேருந்து சக்கரம்

 அரசுப்பேருந்தில் மழைக்காலம் என்றால் உள்ளே மழை, வெயில் காலம் என்றால் நேரடி சூர்ய தரிசனம் இவையெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது. சமீபகாலமாக பேருந்துகளில் சக்கரங்கள் சாலைகளில் உருண்டோடி அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்றுள்ளது. இதனால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சத்துடனே செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை வேப்பன்வலசிற்கு செல்லும் 16ம் எண் கொண்ட நகர பேருந்து பேருந்து, (TN57 N 1286) 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வேப்பன்வலசு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் இடதுபுற சக்கரம் கழன்று ஓடியது.

பேருந்து சக்கரம்

இந்த சக்கரம்  வீடுகளின் அருகே இருந்த பெரிய கழிவு நீர் ஓடையில் விழுந்தது. பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே சக்கரம் கழன்றதால், பேருந்து நிலை தடுமாறியதில் பயணிகள் கூச்சலிட்டு அலறினர். ஓட்டுநர் சமயோசிதமாக பேருந்தை நிறுத்திவிட்டார். இதனால் பயணிகள் உயிர் தப்பியது. பழனி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் சக்கர கழன்றதில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி  உள்ளது. 


 3 ஆண்டுகளுக்கு முன்  மகளிர் அனைவரும் தமிழக அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தால் ஏற்கனவே நட்டத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக் கழகம் கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி திண்டாடி வருகிறது. இதனால் அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியாளர் பற்றாக்குறையை போக்கவோ முடியாத நிலை நீடித்து வருவதாக  போக்குவரத்து துறை அதிகாரிகள் கவலை  தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு  நடந்த இதே போன்ற நிகழ்விற்உ பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web