போலீஸ் வாகனத்தில் இருந்து தானாக கழன்று ஓடிய சக்கரம்.. பதறிய பெண் இன்ஸ்பெக்டர்!

 
ஜெயலட்சுமி

சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயலட்சுமி. வழக்கம் போல் நேற்று இரவு பணி முடிந்து மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு தனக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை காவலர் பாண்டியன் ஓட்டினார். இந்நிலையில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, ​​திடீரென காரின் பின் டயர் முற்றிலும் கழன்று விட்டது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சிறிது தூரம் நின்றது.

அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் இருவரும் காரில் இருந்து கீழே இறங்கி விபத்தை வீடியோ பதிவு செய்தனர். அப்போது, ​​போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி கூறுகையில், ‘‘கார் டயர் கழன்று, எவ்வளவு தூரம் கார் நின்றது பாருங்கள்... கடவுள் புண்ணியத்தால் உயிர் பிழைத்துள்ளோம்’’ என்றார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், போலீசாருக்கு வழங்கப்பட்ட பழைய வாகனங்களை அரசு  சீரமைக்க வேண்டும் என சக போலீசாரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விபத்து குறித்து பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web