வெள்ளை மாளிகை தாக்குதல் விவகாரம்.. ஹிட்லரின் கொள்கைப்படி நாட்டை அடைய திட்டம்.. பகீர் கிளப்பிய இந்தியர்!

 
 வெள்ளை மாளிகை தாக்குதல்

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மே 22 அன்று இரவு, வெள்ளை மாளிகையை நோக்கி வேகமாக வந்த டிரக் ஒன்று ஹெச் ஸ்ட்ரீட், வடமேற்கு மற்றும் 16வது தெரு சந்திப்பில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவைச் சுற்றியுள்ள பாதுகாப்புத் தடைகள் மீது மோதியது.

உலோகத் தடுப்புகளை ஒருமுறை மோதிய பின், லாரி ரிவர்ஸ் சென்று மீண்டும் தடுப்புகளைத் தாக்கியது. இதனால், லாரியின் இன்ஜின் அணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து புகை வெளியேறியதுடன் எண்ணெய்யும் கசிந்தது. லாரியில் இருந்து இறங்கிய நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். முதலில் விபத்து என்று போலீசார் நினைத்தனர். ஆனால் ஒரு மோதலுக்குப் பிறகு, ரிவர்ஸ் திரும்பி வந்து மீண்டும் மோதியது, மேலும் அந்த நபர் ஹிட்லரின் நாசிக் கொடியை வைத்திருந்தார்.

விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷிக் கந்துலா என்பது தெரியவந்தது. வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து, அதிகாரத்தைக் கைப்பற்றி, தன்னைத் தானே நாட்டின் தலைவராக அறிவிப்பதுதான் தனது திட்டம் என்று கந்துலா கூறியுள்ளார். விசாரணையின் போது, கந்துவா தனது இலக்கை அடைய தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் கொல்ல தயங்க மாட்டேன் என்று கூறினார். கந்துலா அமெரிக்காவின் செயின்ட் லூயிஸிலிருந்து டல்லாஸுக்கு பறந்தார், அங்கு அவர் ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்தார். பின் அவர் வெள்ளை மாளிகையை தாக்கினார்.


 
கந்துலாவின் வழக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது. குற்றம் சாட்டப்பட்ட கந்துலா (வயது 21), தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நாசிக் ஜெர்மனியின் சித்தாந்தத்துடன் சர்வாதிகாரத்துடன் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாக அவர் கூறினார். இதையடுத்து, கந்துலாவுக்கான தண்டனை தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 23ஆம் தேதி வழங்கப்படும் என்று நிதிபதி அறிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web