ஊரே கதறியது... குழந்தைங்கன்னு கூட பார்க்கலையே... 3 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!
மொத்த கிராமமும் சேர்ந்து கதறியது. பிஞ்சு குழந்தைங்கன்னு கூடப் பார்க்காம மூன்று குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார் துர்க்கேஸ்வரி.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி பதோஹி பகுதியில் வசித்து வருபவர் ராம்பரன். இவரது மகன் சந்தீப். தங்கள் மகனுக்கு கடந்த 2022 நவம்பர் மாதம் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். சந்தோஷமாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையின் காரணமாக கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் துர்க்கேஸ்வரிக்கு ஒரு ஆண், இரண்டு பெண் என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பதால் துர்கேஸ்வரி நீண்ட நாட்களாக தனது தாய் வீட்டில் தான் இருந்துள்ளார் .
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துருக்கேஸ்வரி தனது கணவரின் வீட்டிற்கு குழந்தைகளுடன் திரும்பியுள்ளார். ஆனால் துர்கேஸ்வரியின் கணவர் எப்போதும் அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தார் துர்கேஸ்வரி. அதன்படி மாமியார் சுனிதா குழந்தைகளை பார்த்துக் கொள்ள துர்கேஸ்வரியும் மகிழ்ச்சியாக தான் இருந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் வந்த சந்தீப், தனது மனைவி துர்க்கேஸ்வரி மற்றும் தாய் சுனிதாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். படிப்படியாக சண்டையில் கொண்டு வந்து விட்டது.
இதனால் அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் நிலைகுலைய செய்துள்ளது. சனிக்கிழமை காலை வீட்டிலிருந்த ஒரு அறையில் துர்கேஸ்வரியும் அவருடைய 3 பிஞ்சு குழந்தைகள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கணவனின் கொடுமை தாங்காமல் மூன்று குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு துர்கேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மருமகளையும் பேரக்குழந்தைகளையும் அந்த நிலையில் பார்த்து ராம்பரன் மற்றும் சுனிதா கதறித்துடித்த காட்சி அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!