எப்போதும் குத்திக்காட்டி ஏளன பேச்சு... மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கணவன்!

 
கனகா தேவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்கு அழகு நாச்சியாபுரத்தில் மகாகிருஷ்ணன்(40) - கனகா தேவி (32) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு முத்துலட்சுமி (14), கவின் (7) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். மகாகிருஷணன் - கனகா தேவி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.

இந்த நிலையில் மகாகிருஷ்ணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவர, கனகா தேவி கணவரை கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். 

கனகா தேவி

இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நேற்றும் தம்பதியர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மகாகிருஷ்ணன், தனது காதல் மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டுகாயம் அடைந்த கனகா தேவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கணவனை கைது விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்வை ஏற்படுத்தியது.

கனகா தேவி

கள்ளத்தொடர்பை பற்றி மனைவி அவ்வப்போது குத்திக் காண்பித்து பேசியதால் என்னால் தூங்க முடியவில்லை. எப்படியாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததாக கூறினார்.

நான் வீட்டுக்குள் கோபத்துடன் புகுந்ததை பார்த்து, அவள் சுதாரித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடினாள். அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த அவளை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பி ஓடினேன் என போலீசார் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web