அம்..மாடியோவ்... 69 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

 
வாலண்டினா


 
தற்போதைய வாழ்க்கை முறையில் ஒருவருக்கு ஒன்று அல்லது 2 குழந்தைகள் மட்டுமே. நமது பெற்றோர் காலத்தில் வீட்டிற்கு 5 அல்லது 6. பாட்டி காலத்தில் 10 , 15 பிள்ளைகள் இருந்தனர். ஆனால் ரஷ்யாவில் ஒரு பெண்மணி 65 குழந்தைகளை பெற்று சாதனைபடைத்துள்ளார். ஒருவர் தனது வாழ்நாளில் இத்தனை குழந்தைகளை பெற முடியுமா , உண்மையில் இது சாத்தியமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

வாலண்டினா
ரஷ்யாவை சேர்ந்த ஃபியோடர் வாசிலியேவ்.இவருடைய முதல் மனைவி  வாலண்டினா. விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இந்த  தம்பதிகளுக்கு 16 ஜோடி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.  அந்த வகையில் 32 குழந்தைகள். அடுத்து 7 முறை தலா 3  குழந்தைகள் வீதம்  21 குழந்தைகள்.   4 முறை தலா 4 குழந்தைகள் பிறந்த  வகையில் 16 குழந்தைகள். இப்படியே வாலண்டினாவிற்கு 69 குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

வாலண்டினா
இந்தச் செய்தியை கேட்கும் போதே ஆச்சரியமாகவும்,அதிசயமாகவும் இருக்கலாம். இத்தகவலை  1782 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி “நிக்கோல்ஸ் மடாலயம்“ எனும் பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டுள்ளது. இச்செய்தி மீண்டும் 1783ல் “ஜென்டில்மேன்“ எனும் பத்திரிக்கையிலும்   பதிவு செய்யப்பட்டுள்ளது.   இதுகுறித்து விசாரணை செய்த கின்னஸ் ஆய்வுக்குழு இந்தத் தகவலை உண்மை என நிரூபித்துள்ளது. இதனையடுத்து  Guinness word Book of Reports புத்தகத்திலும் வாலண்டினாவின் பெயரை சேர்த்துக் கொண்டது.  
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்  அறிவியல் மற்றும் மகளிர் சுகாதார ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநர் ஜேம்ஸ் சேகர்ஸ் “  ஒரு பெண் இயற்கையாக எத்தனை குழந்தைகளைப் பெற முடியும் என்பதற்கான அடிப்படை வரம்புகளைக் கண்டுபிடிப்பதே எனது ஆய்வு.  நவீன அறிவியலின் கோட்பாட்டின் படி, ஒரு பெண்  நினைத்ததை காட்டிலும் அதிகமான குழந்தைகளுக்கு தாயாக முடியும் என்பதை கண்டுபிடித்தேன்,” எனக் கூறியுள்ளார்.  பெண்கள் பொதுவாக 15 வயதிற்குள் பருவம் அடைகின்றனர். அவர்களின் கருப்பைகள் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒரு முட்டையை வெளியிடுகின்றன.  மாதவிடாய் நிறுத்தத்தில் முட்டை சப்ளை தீர்ந்து விடும் வரை இது தொடரும். பொதுவாக 51 வயது வரை நீடிக்கும்.  


மாதவிடாய் நிறுத்தப்படுவதற்கு முன்பு, பெண்களின் கருவுறுதல் குறையும், ஒரு பெண்ணுக்கு 45 வயதில் ஒரு சுழற்சியில் குழந்தை பெறும் வாய்ப்பு மாதத்திற்கு 1 சதவிகிதம் மட்டுமே. 40 வருட கால இடைவெளியில் 27 கர்ப்பங்கள் இருந்திருக்கலாம். அதிலும் இரட்டைக் குழந்தைகள், மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வழக்கமான கர்ப்பத்தை விட விரைவில் பிறக்கலாம். வாலண்டினா 40 வருடத்தில் தோராயமாக 18 ஆண்டுகள் கர்ப்பத்திலேயே  கழித்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web