நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு தான் காரணம்... கனிமொழி எம்.பி பேச்சு!
தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு நூற்றுக் கணக்கானவர்களின் உழைப்பு தான் காரணம் என்று கனிமொழி எம்.பி., பேசினார்.
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் - கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி 3வது நெய்தல் கலை விழா - உணவுத் திருவிழா தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் அக்டோபர் 11ம் தேதி கோலாகலமாகத் துவங்கியது.

தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற உழைத்த அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உள்ளிட்டோரைச் சால்வை அணிவித்துக் கௌரவித்து, பரிசுகளை வழங்கினார்.
புகைப்பட கண்காட்சியில், 1,500 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம் வெற்றி பெற்ற ரூபன் ராஜ், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வெற்றி பெற்ற வே.சரவணகுமார் (அ) ஜியோ ஷரவண், 8 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரத்தைக் கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார். மேலும், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 8 நபர்களுக்குப் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
நிறைவு விழாவில் பேசிய கனிமொழி , “இந்த புத்தகக் கண்காட்சிக்கான பணிகள் தொடங்கிக் கொண்டு இருந்த நேரத்தில், நமது மாவட்டத்திற்குப் புதிதாக ஒரு மாவட்ட ஆட்சியர் வருகிறார் என்று தெரிவித்தார்கள். அந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் என்று சொன்ன பொழுது இனிமேல் புத்தகக் கண்காட்சிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். தமிழ்நாட்டில் இந்த அளவிற்குப் புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடியவர். தூத்துக்குடி புத்தகக் கண்காட்சியை இவ்வளவு சிறப்பாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து கலந்து கொள்ளக்கூடிய வகையில் நடைபெறக் காரணமானவர்.

இப்படிப்பட்ட ஒரு சிறப்பான புத்தகத் திருவிழா, நெய்தல் கலை விழா, உணவுத் திருவிழா என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றாகக் கொண்டு வந்து வெற்றியோடு நடத்த வேண்டும் என்றால், அதில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றினால்தான் அது சாத்தியமாகும். இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
