உலகப்புகழ் பெற்ற குலசை தசரா கொடியேற்றத்துடன் துவங்கியது.. ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 
உலகப்புகழ் பெற்ற குலசை தசரா கொடியேற்றத்துடன் துவங்கியது.. ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குலசையில் குவிந்து திரளாக கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் தசரா திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும்.

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

இன்று அக்டோபர் 3ம் தேதி காலை 9.30 மணிக்கு குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிய்து. கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. 

இன்று இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் பவனி வந்து அருள்பாலிப்பார். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணியும் பக்தர்கள்,தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

குலசை

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 12ம் தேதி நடைபெறும். இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அக்.13ம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் வைபவம் நடைபெறும்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!