காதலியுடன் தகராறு... உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய காதலன்!

 
இளம்பெண்

திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் இளைஞர் ஷாஜகான் (26). இவர், அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒருகட்டத்தில் அந்த பெண்ணும், ஷாஜகானும் காதலித்தனர். 

இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்துவந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணுடன் ஷாஜகான் உல்லாசமாக இருந்துள்ளனர். 

இளம்பெண்

இதனிடையே, இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. பெண்ணின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். 

இதனால் விரக்தி அடைந்த ஷாஜகான் பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை. காதலை கைவிட்டதால் விரக்தியடைந்த ஷாஜகான், காதலியை வேறு எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மீண்டும் அழைத்தபோது காதலி வர மறுத்துவிட்டதோடு, இனி பேச வேண்டாம் எனவும் கூறியதாக கூறப்படுகிறது.
இளம்பெண்

அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து பெற்றோரிடம் கூறினார். பின்னர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web