அதிர்ச்சி வீடியோ.. வாகன சோதனையில் மேலாடையை இறக்கி காட்டிய இளம்பெண்.. அருகில் வரும் காவலர்!

 
அமெரிக்கா
 

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை ஒன்று நடைபெற்றது.  இதில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது, கார் ஒன்று வந்தது. அதனை காவலர் நிறுத்தினார். ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் 45 கி.மீ. வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 65 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண், சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறி விட்டு, மேலாடையை கீழே இறக்கி காண்பிக்கிறார். காவலர் இதனை நான் இன்டர்நெட்டில் எந்த நேரமும் பார்க்க முடியும் என  பதில் அளித்ததும் உடனே அந்தப் பெண் இவற்றை  ஏன் நீங்கள் தொட்டுப் பார்க்கக்கூடாது? என கேட்கிறார். அந்த அதிகாரியும் அதற்கு ஒப்பு கொள்கிறார்.  
அதன் பேரில் தள்ளி நின்ற காவலர் காரை நெருங்கி, அந்த பெண்ணின் மார்பகங்களை தொட்டுப் பார்க்கிறார்.  இதன் பிறகு எச்சரிக்கையுடன் உங்களை செல்ல அனுமதிக்கிறேன் என காவலர் கூறிவிடுகிறார். அந்த பெண்ணும் காவலருக்கு நன்றி கூறுகிறார். இதனை பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த நபர் வீடியோவாக படம் பிடித்திருக்கிறார்.அவர்களை எச்சரித்த காவலர், பின்னர் போகும்படி கூறி விட்டு நடந்து செல்கிறார்.

அமெரிக்கா
அந்த வீடியோவில் காவலரின் முகம் காட்டப்படவில்லை. ஆனால், பெருநகர நாஷ்வில்லே காவல் துறை என்பதற்கான அடையாளம் காவலரின் தோள் பகுதியில் காணப்பட்டு உள்ளது. இந்த வீடியோ குறித்து தெரிய வந்ததும், உடனடியாக காவல் துறை விசாரணை நடத்தியது. இதில், சீன் ஹெர்மன் என்ற அந்த காவலர் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web