பகீர் வீடியோ... காரில் டீசல் நிரம்பிய பிறகும் ஒழுகவிட்ட இளைஞர்... ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!

 
கார்


ரீல்ஸ் மோகத்தில் இளசுகள் பல நேரங்களில் விபரீத செயல்களை செய்து வருகின்றனர். இத்தகைய செயல்கள் ஆபத்துக்களையும் ஏற்படுத்தி விடுவதுண்டு. அந்த வகையில்  ராஜஸ்தானில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் தனது எஸ்யூவியின் காருக்கு டீசல்  போடும்போது மோசமான செயல் ஒன்றில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டார்.


இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது காருக்கு டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்து டீசல் டேங்க் முழுவதுமாக நிரம்பியும் கூட பாதி டீசலை கீழே ஒழுக விடுகிறார். அதே நேரத்தில் மற்றொரு  பெட்ரோல் பங்கிலும் அந்த நபர் டீசல் முழுவதுமாக இருந்தும் வேண்டும் என்றே ரீல்ஸ் எடுக்க டீசலை வெளியே விட்டுக்கொண்டு இருந்தார்.

பெட்ரோல் டீசல்


அதன் பிறகு காரில் நடுரோட்டில் கெத்தாக செல்வதுபோலவும் ஒரு இடத்தில் நின்று கொண்டு கூல்ரிங்ஸ் குடித்துக்கொண்டு இருந்தார். இந்த வீடியோ வெளியானதில் காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. இதன் அடிப்படையில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.இச்சம்பவம் பேரிடரை ஏற்படுத்தியிருக்கலாம் என வீடியோவில் இருந்த பதே சிங் மற்றும் மகாவீர் குஜ்ஜார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருடன் பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web