ஷாக் வீடியோ... நீர்யானைக்கு பிளாஸ்டிக் பைகளை உணவாக கொடுத்த இளைஞர்!

தினமும் சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. விலங்குகள் குறித்த வீடியோக்கள் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.விலங்குகளின் மீதான அன்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவில் ஒருவர் நீர் யானையின் வாயில் பிளாஸ்டிக் பையினை திணிக்கிறார்.
A safari park visitor threw a plastic bag into the mouth of a Hippopotamus at the Taman Safari in Indonesia pic.twitter.com/PfApqNusgt
— non aesthetic things (@PicturesFoIder) July 8, 2024
இச்சம்பவம் இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா வனவிலங்கு சரணாலயத்தில் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்த நபரின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் இது மிகவும் அருவருக்கத்தக்க செயல். வனவிலங்குகள் சரணாலயத்தில் இப்படி விலங்குகளுக்கு உணவளிக்க யார் அனுமதி கொடுக்கிறார்கள் எனவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு கண்டனங்களையும், சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!