அதிர்ச்சி வீடியோ... இன்ஸ்டா வீடியோவுக்காக ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம் செய்த இளைஞர்!

 
காரில் தொங்கும் இளைஞர்
 

2 கே கிட்ஸ் அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபமாக யூ-ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டா போன்றவற்றில் அதிக வியூவ்ஸ் வர வைக்கும் தந்திரமாகவும், லைக்ஸ்களையும், அதிக ஷேர்களையும் குவிக்கவும் விபரீதம் அறியாமல் பல ஆபத்தான வீடியோக்களைப் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது.இந்த முயற்சியில் பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. 

தண்ணீருக்குள் பெட்ரோல் ஊற்றி, பற்ற வைத்து, அந்த நெருப்புக்குள் குதிப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு நெருக்கடியான சாலையில் டூ வீலர் ஓட்டிச் செல்வது, பல அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து குதித்து இறங்குவது, உயிரியல் பூங்காக்களில் கூண்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பி செல்ஃபி வீடியோ எடுப்பது, இன்னும் ஒரு படி மேலே போய், சிங்கம் போன்ற விலங்குகள் உலவும் இடத்தில் குதித்து, தூரத்தில் சிங்கமோ, புலியோ தெரிகிற மாதிரி செல்ஃபி எடுப்பது என்று ஆபத்தின் உச்சம் தான் இந்த ரக வீடியோக்கள்.

சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த கார் வீடியோ பார்வையாளர்களைப் பதைபதைக்க செய்கிறது. ஓடிக் கொண்டிக்கும் கார் ஒன்றின் கதவில், பிளாஸ்டிக் உதவியுடன் இளைஞர் ஒருவர் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.  இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web