பாம்புடன் செல்பி எடுக்க முயன்று இளைஞர் பலி... பிறந்தநாளில் சோகம்!

 
பாம்பு
 


 

இன்றைய இளசுகள் செல்பி  , லைக்ஸ், வீடியோஸ் என மோகங்கொண்டு அலைந்து திரிகின்றனர். இவை பல நேரங்களில் விபரீதங்களையும், சில நேரங்களில் உயிர் ஆபத்துக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன.  அந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது பிறந்தநாளில் பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.

பாம்பு

இதுவே விபரீதமாகி விட்டது.  மகாராஷ்டிர மாநிலம் புல்தானா  மாவட்டத்தில் சிகாலி அருகே கஜானன் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் ஜக்டேல் . இவர் தன்னுடைய 31 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.  

பாம்பு


இதனையடுத்து  தனது பிறந்தநாளையொட்டி தனது நண்பர்கள் ஆரிப் கான் மற்றும் தீரஜ் பண்டிட்கர் ஆகியோருடன் வெளியே சென்றுவிட்டார்.  அப்போது பாம்பை பிடித்து அதனை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்குமாறு நண்பர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். உடனே சந்தோசும் குஷியில் வீறாப்பாக  பாம்புடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தார். திடீரென பாம்பு கடித்து  சந்தோஷ் பலியானார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web