இதப் பார்றா... அரசுப் பேருந்தை மாமியார் வீட்டுக்கு ஓட்டிச்சென்ற இளைஞர்!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஆத்மகுரு மண்டலத்தில் வேங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தரகையா. இவர் வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர், நந்தியால் மாவட்டத்தில் முச்சுமர்ரி பகுதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தரகையாவின் மனைவி, சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக தரகையாவிடம் பணம் இல்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டே பேருந்து நிலையத்திற்கு வந்தார் . ஆத்மகுரு பேருந்து நிலையத்தில் யாரும் கேட்பாரின்றி அரசுப்பேருந்து ஒன்று தனியாக நின்றிருந்தது.
அதன் சாவிகளும் பேருந்திலேயே இருந்துள்ளன. இதனால், ஓட்டுநரான தரகையாவுக்கு உடனடியாக யோசனை ஒன்று வந்துள்ளது. ஊரிலுள்ள மனைவியை காண அந்த பேருந்தை ஓட்டி செல்லலாம் என முடிவு செய்துள்ளார். அரசுப்பேருந்தில் ஏறி அதனை இயக்கி, மாமியார் வீட்டுக்கு சென்றார். ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசுப்பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், அரசு பேருந்தை அங்கீகாரமின்றி பயன்படுத்தியதற்காக, தரகையாவை போலீசார் கைது செய்தனர்.
எனினும், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கூறுகின்றனர். டெப்போவில் இருந்து அரசுப்பேருந்து காணாமல் போயிருப்பதாக அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்து இருக்கிறார். இதன் அடிப்படையிலும், சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். தரகையாவிடம் இருந்த அரசுப்பேருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பிறகு ஆத்மகுரு டெப்போ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தரகையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக அவருக்கு எதிராக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!