தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர் பலி... போதையில் சோகம்!

 
தண்டவாளம்

 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்  வடமழை மணக்காடு கிராமத்தில்  ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா  நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு 3 இளைஞர்கள் அருகே இருந்த ரயில் தண்டவாளத்தில் அதிகாலையில் படுத்து தூங்கிவிட்டனர்.  அப்போது காலை 5 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியன்பள்ளி நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த  3  இளைஞர்கள் மீதும் மோதியது. ரயில் மோதியதில்  மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

ரயில் தண்டவாளம்

 வேதாரண்யம் பகுதியில் வசித்து வரும்  குமாரசாரதி என்ற இளைஞர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த துளசி நாராயணனும், பிரபாகரனும்  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார்  தீவிர விசாரணை  நடத்தி  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web