மீண்டும் ஒரு நேகா... இளம்பெண் வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை... ஒரு தலைக் காதலால் விபரீதம்!

 
அஞ்சலி

 கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் 20 வயது  அஞ்சலி அம்பிகேரா .  இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் 23 வயது இளைஞர் விஷ்வாவும்  வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது.  இருவரும்  நட்பாக பழகி வந்துள்ளனர்.  அஞ்சலி ஒரு வேலை விஷயமாக வெளியூர்  சென்றுவிட்ட நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டிற்கு மீண்டும் திரும்பினார்.  அப்போது  விஷ்வா, மைசூருக்கு அழைக்கவே அஞ்சலி மறுத்துவிட்டார்.  

காதல் ஜோடி
இந்நிலையில் விஷ்வா தன்னுடைய காதலை அஞ்சலியிடம் கூறினார். அதை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்வா என் காதலை ஏற்கவில்லை என்றால் நேகா நிலைமை தான் எனக் கூறினார். இதன் பிறகு அஞ்சலி விஷ்வாவுடன் பேசுவதை தவிர்த்தார்.  ஆத்திரத்தில் விஷ்வா நேற்று காலை அஞ்சலியை வீடு புகுந்து ஓட ஓட விரட்டி சராமாரியாக  குத்தி கொலை செய்தார். இதைப் பார்த்த அவருடைய பாட்டியும் சகோதரிகளும் கதறித்துடித்தனர்.  விஷ்வா ஒரு தலைக்காதல் நிறைவேறாததால் அஞ்சலியை   கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சாதி சண்டை
இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர்‌ அஞ்சலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன்   தலைமறைமாக உள்ள விஷ்வாவை வலை வீசி தேடி வருகின்றனர். ஏப்ரல்  28ம் தேதி கர்நாடக மாநிலம் உப்பள்ளியில்  கல்லூரி வளாகத்தில் வைத்து பயாஸ் என்ற மாணவர் தன்னை காதலிக்க மறுத்த நேகாவை  கொடூரமாக குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்  தற்போது ஒரு தலை காதலால் மற்றொரு பெண்ணும் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும்  பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web