பகீர்!! 21 வயசு தான் ஆச்சு!! நடனமாடிய போது இளைஞர் சரிந்து விழுந்து பலி!!

 
மணி பிரசாந்த்

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை 60 ஐ கடந்தவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவதுண்டு. இதனால் பலர் உயிரிழப்பதும் உண்டு. ஆனால் தற்போது பள்ளி, கல்லூரி  மாணவர்கள் , இளைஞர்கள்  என மிக சின்னஞ்சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு திடீர் மாரடைப்புகள் சிறிய வயதில் ஏற்பட்டு உயிரிழப்பது  சர்வ சாதாரணமாகி வருகிறது.

மணி பிரசாந்த்

மணமேடையிலேயே சரிந்து மரணம், விளையாடிக் கொண்டிருக்கும் போதே விளையாட்டு வீரர் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்து மரணம் என அதிகரித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருமணத்தில்  21 வயதே ஆன இளைஞன் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்து உயிரிழந்தது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் 21 வயது  மணி பிரசாந்த்.

rip

இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவரின்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி அம்பத்தூர் தொழிற்பேட்டை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணி பிரசாந்த், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உற்சாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மணி பிரசாந்த் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web