பைக்கில் படுத்திருந்தவரை கீழே தள்ளி பைக்கை திருடி சென்ற இளைஞர்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
பைக் திருடன்

 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலத்தில்  அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. காமராஜர் நகரில் வசித்து வரும்  லோகநாதன் கடையில் மது அருந்திவிட்டு போதை அதிகமானதால் இருசக்கர வாகனத்தில் படுத்திருந்தார்.

சரியாக அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த மர்ம நபர்  இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் படுத்து தூங்கியவரை  கீழே தள்ளி விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றுவிட்டான்.  போதை தெளிந்து லோகநாதன் எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் தொலைந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.  

போலீஸ்

உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தார்.  இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web